முத்தான முதல் பத்து நாட்கள்
قال الله تعالي وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3)عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : {والفجر وليال عشر}عشر الأضحية والوتر يوم عرفة والشفع يوم النحر هذا حديث صحيح رواه الحاكم في المستدرك
روي ان الله اختار من السنة ثلاث عشرات:العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحي لما فيه من يوم التروية ويوم عرفة والأضاحي والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء , قال الفقهاء رح لو قال رجل لله علي أن أصوم أفضل الأيام في سنتي هده بعد رمضان يجب عليه العشر الأول من دي الحجة

1.துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்குஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்குமிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோதுஅல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதைவிடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில்ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில்பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத்தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்குபரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலிசுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்குஉதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவதுதீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
இந்த நாட்களில் ஒரு நாள் நோன்பு நோற்பது ஓராண்டு நோற்பதற்குநிகராகும் .அதில் ஓர் இரவு வணங்குவது லைலத்துல் கத்ரு இரவில்வணங்குவதற்கு நிகராகும். அறிவிப்பு ;அபூஹுரைரா (ரலி)
-திர்மிதி.
இஃக்லாஸ் (மனத்தூய்மை) அதிகரித்தால் நன்மை இன்னும்அதிகமாகும்.
அனஸ்(ரலி); இந்த நாட்களில் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஆயிரம்நாட்களுக்கு சமம்; அரபா நாளின் நோன்பு பத்தாயிரம் நாட்களுக்குசமம்.
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்குமுந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின்பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்
ஆதாரம்-முஸ்லிம்
நபி; சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு.
ஆயிஷா (ரலி); யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?
நபி; அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் வாசல்களில் 30ஐ திறக்கிறான்; தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.
உம்மு சலமா(ரலி); அரஃபா நாள் நல்ல திருநாள்;
நன்மையும் அபிவிருத்தியும் நிறைந்த நாள்.அருளும் மன்னிப்பும் அமைந்த நாள்!
இப்னு ஜாவிர்து(ரலி) கூறுகிறார்கள் ;நானும் என் தோழரும் கல்வி தேடி பயணமாணோம். அரஃபா தினத்தின் மாலையில் லூத் நபி கூட்டத்தினர் அழிக்கப்பட்ட இடம் அடைந்தோம். யதார்த்தமாக அங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் புழுதி படிந்த முகத்துடன் ஒருவன் இருந்தான்.தலையெல்லாம் மண்.
‘நீ யார்?’ அவன் மவுனமாக இருந்தான்.
‘நீ இப்லீஸா?’ ‘ஆமாம்!’ ‘ஏன் இந்த கோலம்?’
அரஃபா மக்களின் காட்சியைப் பார்த்துத்தான்! 50 ஆண்டுகளாக அவர்களை வழிகெடுத்து வைத்திருந்தேன். இன்;று அரஃபா தினம் அவர்களின் மீது அருள் இறங்கிவிட்டது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. இதை என்னால் சகிக்க முடியவில்லை.அதனால் என் தலைமீது நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேன்.
எனக்கு ஆறுதல் வேண்டுமல்லவா? ஆகவே இங்கு ஓடி வந்துவிட்டேன். இங்கு அழிக்கப்பட்ட இந்த மக்களை நினைத்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும்பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்குஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்குமிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ்அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாகசெய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இருநபித்தோழர்களும்துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும்கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள்இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் – புகாரி
ஆதாரம் – புகாரி
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹுதொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும்கூறுவது.
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் 1 லிருந்து குர்பானிஅறுக்கும்வரை தன் முடி நகம் களைய வேண்டாம் (முஸ்லிம்)
குர்பானியின் வரலாறு ;
குர்பானி கொடுக்கும் வழக்கம் பண்தொட்டு மக்களிடையே நிலவிவந்துள்ளது என்பது குர்ஆன் கூறும் உண்மை.
குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் நாம்கடமையாக்கினோம். (23:34)
இறை ஆணைப்படி ஆதமுடைய மக்கள் ஹாபீலும் காபீலும்இறைவனுக்கு குர்பானி கொடுத்தனர். ஒருவருடையது ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றவருடையது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (5:27)
இப்றாஹீம் (அலை) தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை பலிகொடுப்பதாக கனவு கண்டு அவ்விதமே செய்ய முற்பட்டதைஅனைவரும் அறிவோம்.
. இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட அவ்விருவரைப் பற்றி தனதுதிருமறைக் குர்ஆனில் ……
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَابُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَاأَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ(102)فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ(103)وَنَادَيْنَاهُ أَنْ يَاإِبْرَاهِيمُ(104)قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ(105)إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ(106){ الصافات

“என்னருமை மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுத்துப்பலியிடுவதாய் மெய்யாகவே கனவில் கண்டேன்; ஆகையால் நீ என்னகருதுகிறாய்? என்று சிந்திப்பாயாக!” என்று கூறினார். (அதற்கு) ”என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடி செய்யுங்கள்.இன்ஷாஅல்லாஹ் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னை நீங்கள்காண்பீர்கள்” என்று அவர் கூறினார். (37;102)
இருவரின் துணிவையும் ஏற்றுக்கொண்ட இறைவன்,இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டை பலியிடச்செய்தான்.வலுப்பமான ஓர் ஆட்டை (பலியிடப்படவிருந்த) அவருக்குப்பகரமாக்கிக் கொடுத்தோம். (37;107)
சுலைமான்(அலை) வானவூர்தியில் ஏறி மக்கா வந்து ஐயாயிரம் காளைஐயாயிரம் ஒட்டகை இருபதாயிரம் ஆடுகளையும் அறுத்துப்பலியிட்டனர் என்பதும் வரலாறு.
நபி (ஸல்) ஒருமுறை 100 ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அதில் 63 ஐ தங்கள் திருக் கரத்தால் அறுத்தார்கள் மீதியை அலீ (ரலி) அவர்கள் அறுத்தார்கள் என்பதும் அறியாத ஒன்றல்ல. குர்பானி ஓர் கடமை:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தாகியநமக்கு ‘குர்பானி’ கடமையாக்கப்பட்டது.அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில்………
ஆகவே, உம்முடைய ரப்பை தொழுது, (அவனுக்காக) குர்பானிகொடுப்பீராக! (108;02) என்று கட்டளையிட்டுள்ளான்.
யாருக்கு கடமை?
வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர் நம் தொழுகைப் பள்ளிக்கு வரவேண்டாம். (இப்னு மாஜா; ஹாகிம்.)
ஜகாத் அல்லது ஸதகத்துல் ஃபித்ரு கடமையானவயது வந்த எல்லா முஸ்லிம் ஆண் பெண்களின்மீதும் கடமை.
தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் பொறுப்பிலுள்ளவர்களுக்கும் செலவு போக குர்பானிக்குத் தேவையான அளவு வசதி இருந்தால் கடமை என்பதே பொருத்தமாகும்
குர்பானி கொடுக்க நாடியிருப்பவர் துல்ஹஜ் பிறை1 லிருந்து முடி நகம் களையாதிருப்பது சுன்னத் ஆகும்
من أراد أن يضحي منكم فلا يأخد من شعره وأظفاره شئا
பிராணியின் தகுதி
குர்பானி பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும்,ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும்இல்லாததாக இருக்க வேண்டும்.
நோய் தாக்கிய, ஒற்றைக்கண் உள்ள, நொண்டியான, முற்றிலும் கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுக்கக் கூடாது
عن البراء رضي الله عنه قال..قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ..أَرْبَعٌ لَا يجوز الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا قال رسولوَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا وَالْكَسِيرَةُ الَّتِي لَا تُنْقِي قُلْتُ إِنِّي أَكْرَهُ أَنْ يَكُونَ فِي الْقَرْنِ نَقْصٌ وَأَنْ يَكُونَ فِي السِّنِّ نَقْصٌ قَالَ مَا كَرِهْتَهُ فَدَعْهُ وَلَا تُحَرِّمْهُ عَلَى أَحَدٍ (نسائ) القرن عَنْ جُرَيِّ بْنِ كُلَيْبٍ قَالَ سَمِعْتُ عَلِيًّا يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُضَحَّى بِأَعْضَبِ الْقَرْنِ فَذَكَرْتُ ذَلِكَ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ نَعَمْ إِلَّا عَضَبَ النِّصْفِ وَأَكْثَر (نسائ)
பாதிக்கு மேல் காது அறுபட்ட, வால் அறுபட்ட ஆட்டை குர்பானி கொடுக்கக் கூடாது
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُضَحَّى بِمُقَابَلَةٍ وَلَا مُدَابَرَةٍ وَلَا شَرْقَاءَ وَلَا خَرْقَاءَ وَلَا عَوْرَاءَ {المقابلة:وهي التي ما قطع طرف أذنها,والمدابرة:وهي التي ما قطع من مؤخر أذنها, والخرقاء:وهي التي تخرق أذنها, والشرقاء:وهي التي مشقوقة الأذن}
مقطوعة الذنب:ولا يجوز مقطوعة الدنب,وان بقي أكثر الدنب جاز,وكدا ان بقي أكثر أدنها جاز
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக்குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாதமெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா (ரலி),நூல்கள்: திர்மிதி (1530), அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா (3144).
பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வுசெய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில்துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்றுநபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அலி(ரலி), ஆதாரநூற்கள்: திர்மிதீ 1532, அஹ்மத், அபூதாவூத், நஸயீ).
நபி(ஸல்) அவர்கள் ‘கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்புநிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால்,மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிகொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்).

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் கொம்புள்ள, முகம்,மூட்டுக்கால், கண்பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவதுசிறப்புக்குரியதாகும்.
கொழுக்க வையுங்கள்
கொழுக்க வையுங்கள்
استشرفوا ضحاياكم فانها علي الصراط مطاياكم உங்கள்குர்பானி பிராணி சிராதுல் முஸ்தகீம் பாலத்தில் உங்களின் வாகனம்.
وَقَالَ أَبُو أُمَامَة عَنْ سَهْل : كُنَّا نُسَمِّن الْأُضْحِيَّة بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسَمِّنُونَ .رَوَاهُ الْبُخَارِيّ
‘மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.” (அறிவிப்பவர்:அபூஉமாமா (ரலி) நூல்: புகாரி, (தஃலீக்).
எனவே குர்பானி பிராணிகளை முன்கூட்டியே வாங்கி நல்ல தீனி போட்டுக்கொழுக்க வைக்கலாம்.
பிராணியின் வயது:
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகம் ஐந்து வயதுபூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆடு, மாடு, இரண்டு வயதுபூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகம் ஐந்து வயதுபூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆடு, மாடு, இரண்டு வயதுபூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
‘முஸின்னா” வைத் தவிர வேறு எதையும் அறுக்காதீர்கள்! அதுகிடைக்கவில்லையானால், ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள் என்றுநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்:முஸ்லிம். அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா (3141), அஹ்மத்.
இங்கு ‘முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு, மாட்டில் இரண்டுபல் முளைத்த பிராணிகளுக்குப் பயன்படுத்தப்படும். ஒட்டகத்திற்கு ஐந்துவயது முடிந்தவுடனும் ஆடு, மாடு ஆகிய இரண்டு வகைகால்நடைகளுக்கும் இரண்டு வயது முடிந்தவுடன் இரண்டு பற்கள்வருவதால், ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், வெள்ளாடு மற்றும் மாடு ஆகியகால்நடைகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்செம்மறி ஆடு 1 வயது பூர்த்தியானால் போதும் எனக் கூறப்படுகிறது. (ஷாஃபிஈ )
'
உள்ஹிய்யா கொடுப்பதினால் எவ்வளவு நன்மை கிடைக்கும்?' என்று தோழர்கள் வினவினர்.
உள்ஹிய்யா கொடுப்பதினால் எவ்வளவு நன்மை கிடைக்கும்?' என்று தோழர்கள் வினவினர்.
'அதன் ஒவ்வொரு உரோமத்திற்கும் ஒரு நன்மையுண்டு' --நபி (ஸல்).
(இப்னுமாஜா)