welcome

Monday, June 25, 2012

*மிஸ்வாக்



*மிஸ்வாக்

329. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள். புஹாரி : 3406 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பற்சுத்தம் பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள் வலியுருத்தியுள்ளார்கள்.பல நோய்களுக்கு பல் காரணமாக இருக்கிறது.பல்லை சுத்தம் செய்வதுவாயை சுத்தப்படுத்துவதுடன் இறைவனின் பொருத்தத்தையும் தரும்என்பது நபிமொழி.
143-நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் சென்றிருந்தேன் அப்போது அவர்கள் தமது கையிலுள்ள ஒரு குச்சியால் பல் துலக்கும் போது உவ், உவ் என்று சொல்வதை நான் கண்டேன். குச்சியோ அவர்களது வாயில் இருந்தது. இவ்வாறு செய்தது அவர்கள் வாந்தி எடுப்பது போல் இருந்தது.
பற்சுத்தம் உடல் பரிசுத்தத்தின் ஒரு பகுதி.குச்சி கொம்புகளால் பல்லை சுத்தம் செய்ய வேண்டும். இதை மிஸ்வாக் என்கிறோம். ஒருவர் உறங்கி எழுந்ததும் பல்லை துலக்க வேண்டியது அவசியம். நான் உங்களுக்கு மிஸ்வாக் செய்வது குறித்து அதிகமே கூறியிருக்கிறேன்.என்று நபிகளார் கூறுவதிலிருந்து பல் சுகாதாரத்துக்கு அவர்கள் அளித்துள்ள முக்கியத்துவம் புலப்படுகிறது. பெருமானார் பகலிலோ இரவிலோ உறங்கிவிழித்த பின்பு மிஸ்வாக் செய்யாமல் இருந்ததில்லை என்று ஆயிஷா நாயகி தெரிவித்திருக்கிறார்கள்.உறங்கி விழித்த பின்னரும் உணவு உட்கொண்ட பின்னரும் பல்லை சுத்தம் செய்யவேண்டும். தொழுகை சொர்கத்தின் திரவு கோளாக இருக்கிறது.தொழுகையின் திரவு கோள் பரிசுத்தமாக இருக்கிறது என்பது நபி மொழி. பல் குச்சி அல்லது பிரஷ் உபயோகிப்பது பல்லையும் வாயையும் சுத்தப்படுத்துகிறது. பல் சுத்தமாக இருப்பின் உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து. 
மிஸ்வாக்கின் சிறப்புகள்
*மிஸ்வாக் செய்வது சுன்னத் ஆகும். 
* மிஸ்வாக் செய்து தொழுகும் தொழுகை மிஸ்வாக் செய்யாமல் தொழுகும் தொழுகையை விட எழுபது மடங்கு சிறந்ததாகும்.
* "மிஸ்வாக் செய்வதை கடைபிடித்து வாருங்கள். அதில்பத்துபிரயோஜனங்கள் இருக்கின்றன" என்று ஒரு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
1.வாயை சுத்தப்படுத்துகிறது 
2.அல்லாஹ்வின் திருப்திக்கு காரணம் ஆகிறது
3.ஷைத்தானுக்கு கோபத்தை உண்டாக்குகிறது
4.மிஸ்வாக் செய்பவரை அல்லாஹ் தன் நேசராக ஆக்கிக் கொள்கிறான் 
5.மலக்குகளும் நேசராக ஆக்கிக் கொள்கிறார்கள்
6.பல் ஈறுகளுக்கு சக்தி அளிக்கிறது 

7.சளியை நீக்குகிறது
8.வாயின் துர்நாற்றத்தை போக்கி நறுமணத்தை அளிக்கிறது
9.பித்தத்தை போக்குகிறது

10.பார்வையை கூர்மை ஆக்குகிறது 
இவை அனைத்தையும் விட இது ஒரு சுன்னத் ஆக இருக்கிறது 
மிஸ்வாக் செய்து வருவதால் எழுபது பயன்கள் கிடைக்கின்றன. மரண வேலையில் கலிமாவை சொல்லும் பாக்கியம் கிடைப்பது அவற்றில் ஒன்றாகும்.
இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். “லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)
நபி(ஸல்) அவர்கள், பல் துலக்குவதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கின்றனர். குறிப்பாக ஒளூ செய்யும் போது பல் துலக்குவதை மிகவும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
 

Wednesday, June 6, 2012

ஸலவாத்து ஆயிஷா


ஸலவாத்து ஆயிஷா

( ஒரு லட்சம் ஸலாவாத்திற்கு சமமானது )

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நாலொன்ருக்குப் பதினான்காயிரம்

ஸலவாத்துக்களை ஒதிவரும் பழக்கமுடையவர்களாயிருந்தார்கள்

அதை அறீந்த ரஸுல் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களூக்கு இந்த

ஸலவாத்தை கற்றுக் கொடுத்து இதனை ஒரு தடவை  மற்ற

ஸலவாத்தைக்களை ஒரு லட்சம் தடவை ஒதுவதற்கு நிகராகும்

என்று கூறினார்கள். இதற்கு " ஸலவாத்துஸ் ஸஆதா " என்றும் " ஸலவாத்துத் தாஇமிய்யா "

என்றும் பெயர்கள் உண்டு.

اللهم صل وسلم وبارك عاي سيدنا محمد واله وصحبه عدد ما في علم الله صلاة داءمة بدوام ملك الله

it was the practice of syyidatina aayisha to recite salawaat fourteen thousand times daily having come to

 know about this the holy prophet taught her following salawaat and declared that recitng it once is equal

to reciting any other salawaat one lakh times